உலகம்

கட்டிடத்தின் மீது மோதி புரண்ட விமானம்! விமானி அறையிலிருந்த கேமெராவில் பதிவான திகில் வீடியோ

பயிற்சி விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி ஓடி அருகிலிருந்த கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளான திகில் வீடியோ வெளியாகியுள்ளது.

விமானி அறையில் பொருத்தப்பட்டிருந்த கேமெராவில் பதிவான திகில் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோவில், விமானி ஒருவர் பறப்பதற்காக ஓடுபாதையில் அதிவேகமாக செல்கிறார்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம், திசை மாறி ஓடுகிறது.

பீதியடைந்த விமானி விமானத்தை நிறுத்த முயல்கிறார். எனினும், நேராக ஓடிய விமானம் அருகிலிருந்த கட்டிடத்தின் மீது மோதி புரண்டுள்ளது.

குறித்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், விமானத்தை ஓட்டியவர் மாணவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த மாணவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!