உலகம்

வெறும் 87 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை – இத்தாலி நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்!!!

வீடு வாங்குவது கனவாக இருக்கும் பட்சத்தில் வெறும் 87 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இது இந்தியாவில் இல்லை. ஆம், இத்தாலியில் தான் இந்த குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டது.

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் சொந்த வீடு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்றின் அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு வாங்குவது கனவாக மாறி வருகிறது. வீடு வாங்க மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தின் பெரும்பகுதியை முதலீடு செய்கின்றனர். சிலர் கடன் பெற்று வீடு வாங்கி அதை வாழ்நாள் முழுவதும் அடைக்கின்றனர்.

நிலம் மற்றும் இடத்தின் மதிப்பு என நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் இயல்பை தாண்டி ஒரு வீடானது வெறும் ரூ.87க்கு விற்க தயாராக உள்ளது. இத்தாலியில் ஒரு வீடு வெறும் ஒரு யூரோ என்னும் விலைக்கு விற்கப்படுவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த விலைக்கு வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடுகளை யாரும் வாங்க முன்வராததற்கு பெரும் காரணம் இருப்பதாக கருதப்படுகிறது.

இத்தாலி நாட்டின் தென் மேற்கில் உள்ள சிசிலி நகரத்தின் சலேமி பகுதியில் தான் இந்த விலைக்கு வீடுகள் கிடைக்கின்றன. இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் ஏலம் விடப்படுகிறது.1968ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தின் மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ளது. நகரங்களில் மீண்டும் மக்கள் அதிக அளவில் இங்கு குடியேற வேண்டும் என்ற முயற்சியில், குறைந்த விலையில் இங்கு வீடுகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. 400க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு தயாராக இருந்தும் பல ஆண்டுகளாக இந்த வீடுகளை வாங்க யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விரைவில் இது சுற்றுலா நகரமாக மாறும் என, அந்த நகரின் மேயர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: