தமிழ்நாடுமாவட்டம்

கனமழையால் நாளை 7 மாவட்டங்களில் விடுமுறை!

கனமழை காரணமாக நாளை (29-11-2021) 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்தனர்.

அதன்பின், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

தற்போது, கனமழை காரணமாக நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமனம்!
Back to top button
error: