தமிழ்நாடு

இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை – ஆகஸ்ட் 23ல் கூடும் சட்டமன்றம்!!

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு மூன்று நாள் விடுப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் திங்கள் அன்று தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். தமிழ்நாட்டின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருக்கிறது என்றும் அதற்கு அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை தான் காரணம் என்றும் கூறினார்.

மறுநாள் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சில எம்.எல்.ஏக்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து சர்ச்சையில் முடிந்தது. அதனை தொடர்ந்து சபாநாயகர் அனுமதியின்றி அவையில் பதாகைகள் காண்பிக்கப்பட்டது. அதன் பின் எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தான் உட்பட கழக நிர்வாகிகள் சிலரை சிக்க வைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார், அதனை தொடர்ந்து நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் அதிமுகவினர் முழுமையாக புறக்கணித்தனர்.இருப்பினும் அவை வழக்கம் போல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.செப்டம்பர் 21 ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே செப்டம்பர் 13ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என அவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார். மொகரம் பண்டிகை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை அளித்து மீண்டும் திங்கள் அன்று கூட்டம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தொழிற்பயிற்சி மையங்களில் புதிய பாடப்பிரிவுகள் – அமைச்சர் உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: