ஆரோக்கியம்

கொத்தமல்லியின் வரலாறும் அதன் பலன்களும்!!

கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

கொத்தமல்லியின் வரலாறு:

இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.

கொத்தமல்லியின் பயன்கள்:

உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை… சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.

கொத்தமல்லி விளைச்சல்:

கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு சுமாராக 12-15 கிலோ விதை தேவைப்படும். நிலத்தினை உழுது, தொழு உரம் இறைத்து, பாத்தி கட்டிய நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தின், ஈர மண்ணில் கொத்துமல்லி விதைகளை தூவி, நிலத்தினை கீறி விட வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை என 40 நாட்களில் 10 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்கிறார்கள்.

100 கிராம் கொத்தமல்லியில் கிடைக்கும் சத்துக்கள்:-

  • ஆற்றல் 20 kcal 100 kJ
  • மாப்பொருள் 4 g
  • நார்ப்பொருள் (உணவு) 3 g
  • கொழுப்பு 0.5 g
  • புரதம் 2 g
  • உயிர்ச்சத்து ஏ 337 μg 37%
  • உயிர்ச்சத்து சி 27 mg 45%

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சமையலுக்கு உபயோகித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா? கூடாதா?
Back to top button
error: