தமிழ்நாடுமாவட்டம்

பல பெண்களை ஏமாற்றிய காசி.. நடிகையுடன் இருந்த வீடியோ ஆதாரம் சிக்கியது! மாட்டி கொண்ட அவன் தந்தை

பல பெண்களை தனது வலையில் வீழ்த்திய காசி வழக்கில் அதிரடி திருப்பமாக அவர் தந்தையும் சிக்கியுள்ளார்.

கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் போன்றோரை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு நட்பாக பழகியவர் நாகர்கோவிலை சேர்ந்த காசி.

தனது கட்டுமஸ்தான உடலை காட்டி நட்பாக பழகியவர்களை காதல் வலையில் சிக்கவைப்பது அவரது பாணி. பணக்கார பெண்களை மட்டும் குறிவைக்கும் காசி , காதலில் சிக்கும் பெண்களை உருகி காதலிப்பது போன்று நடித்து அவர்களிடம் உல்லாசம் அனுபவிப்பார்.

பெண்களுடன் தனிமையில் இருப்பதை நண்பர்கள் உதவியுடன் பெண்களுக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்யும் காசி வீடியோவை வைத்து பெண்களை பணம் கேட்டு மிரட்டுவார். இது போன்று காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

காசியால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்களும் அவர் மீது புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில் காசியுடன் நெருக்கமாக இருந்த நடிகை யார்? விஐபிக்களின் மனைவி யார்? என்பது தெரியாத நிலையில், அதற்கான ஆதாரங்கள் தற்போது சிக்கி உள்ளதாம்.

காசியின் லேப்டாக்களில் தடயங்களை அவரது அப்பா, அழித்ததாக சொல்லப்பட்ட அனைத்து தடயங்களும் மறுபடியும் மீட்கப்பட்டுவிட்டதாம்.

அதாவது கோழிப்பண்ணையில் ரகசிய லேப்டாப் முன்னர் மீட்கப்பட்டது. அதில் இருந்த வீடியோ ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்திருக்கிறார்.

ஆனால் அந்த ஆதாரங்கள் தற்போது மீண்டும் மீட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் தங்கபாண்டியன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விசாரணை பிடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தடயங்களை அழித்ததாக காசி தந்தையின் பெயரையும் குற்றவாளி பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

loading...
Back to top button
error: Content is protected !!