ஆரோக்கியம்

நோய்களுக்கு காரணமான உடல் உஷ்ணம்.. போக்குவதற்கு தீர்வு இதோ!

நமது உடலில் அதிகமான நோய்களுக்கு காரணமாக விளங்குவது உடல்சூடு. உடல்சூட்டை குறைத்தாலே நோய்நொடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். வாதம், பித்தம், கபம் நமது உடலில் அதிகமானாலும் குறைந்தாலும் நமது உடலில் நோய் அதிகமாகும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

அதனால் நமது உடலின் உஷ்ணத்தை குறைப்பது பல்வேறு வகையிலும் நம்மை பாதுகாக்கும். ஆனால் தொடர்ந்து கணினி முன்பு உட்கார்ந்து வேலை பார்ப்பது, இரவு வேலையை அதிகமாக செய்வது, மார்க்கெட்டிங் உள்ளிட்ட வேலைகளுக்காக வெயிலில் அலைத்து திரிபவர்கள், காற்றோட்டமில்லலாத இடங்களில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு அதிகமாக உடல் உஷ்ணம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த உஷ்ணத்தை குறைப்பதற்கு வீட்டிலேயே சில விஷயங்களை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். இதற்கு நல்லெண்ணெய் சிறப்பான பலனை அளிக்கும். நல்லெண்ணைய்யை அடுப்பில் வைத்து சூடாக்கி சில பற்கள் பூண்டு மற்றும் சிறிது மிளகு போட்டு காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் நமது கால் கட்டை விரல்களில் மட்டும் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நமது உடல் குளிர்ச்சி அடைவதை நாம் உடனடியாக உணர முடியும். இதை அடிக்கடி செய்வது சிறந்த பலனை கொடுக்கும். இதன்மூலம் நமது முகம் மலர்ச்சியடையும்.

இதேபோல நல்லெண்ணையை காய்ச்சி சிறிது அகத்தி இலைகள் மற்றும் பாலில் ஊறவைத்த வெந்தயத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியவுடன் இறக்கி வைக்க வேண்டும். இந்த தைலத்தை வாரம் இரண்டு முறை அல்லது ஒரு முறையில் தலையில் தடவி ஊறவைத்து குளிக்க வேண்டும். இதன்மூலமும் உடலின் உஷ்ணம் குறையும்.

அடுத்ததாக சோற்றுக்கற்றாழையின் சோற்றை எடுத்து சுத்தம் செய்து பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து கால வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலமும் உடல் உஷ்ணம் குறையும். மேலும் தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்ளவேண்டும்.

தினசரி தூங்க செல்வதற்கு முன்பாக தொப்புளில் விளக்கெண்ணெய் தடவுதல், அதிகமான தண்ணீர் மற்றும் நீர்மோர் குடிப்பது போன்ற செயல்களாலும் உடல் உஷ்ணம் நீங்கி சிறப்பான பலன்களை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: