தொழில்நுட்பம்

ஒரு நொடியில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? இதோ முழு விவரம்!!

தமிழக மக்கள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ரேஷன் தற்போது வீட்டில் இருந்தபடி ரேஷன் கார்டு பெறுவது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, மொபைல் எண், உறுப்பினர்களின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, பான் கார்டு, கடந்த மின்சார கட்டணம், வருமான சான்றிதழ், சாதி/வகை சான்றிதழ், வங்கி பாஸ்புக் மற்றும் உங்கள் பாஸ்புக்கின் முதல் பக்கத்தின் நகல், கேஸ் சிலிண்டர் இணைப்பு விவரங்கள் முதலியன கட்டாயமாக்கப்பட ஆவணங்கள் ஆகும். BPL- இது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும், APL- வறுமைக் கோட்டுக்கு மேல் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கும், AAY- இந்த ரேஷன் கார்டு அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது மற்றும் மற்ற வர்க்க மக்களை விட பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

AY- அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த ரேஷன் அட்டையில் இலவசமாக 10 கிலோ அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. எந்த வருமான ஆதாரமும் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசின் உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று Food Security பிரிவுக்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். திரையில் தோன்றும் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். அதன் பின் SUBMIT கிளிக் செய்வதன் மூலம் ரேஷன் கார்டின் விண்ணப்ப எண் பெறப்படும். அதன் மூலம் கார்டின் நிலையை சரி பார்க்கலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றைய (செப்.20ம் தேதி) பங்குச்சந்தை விவரம்!
Back to top button
error: