ஆரோக்கியம்

தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர வேண்டுமா? இதோ எளிதான வழி

தலைமுடி கொட்டுவது, இளம் வயதில் நரைப்பது போன்ற பிரச்சினைகளை தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கின்றனர். இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன.

முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர

சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.

முடி நன்றாக வளர

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.

செம்பட்டை முடி நிறம் மாற

மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம் மாறும்.

முடிநன்கு வளர

செம்பருத்தி பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும்.

தலைமுடி உதிர்வதை தடுக்க

கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகினால் தலைமுடி உதிராது.

இளநரை கருப்பாக

நெலிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: