தொழில்நுட்பம்இந்தியா

Masked ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்கள் இதோ..!

இன்றைக்கு நம் அனைத்து பயன்பாட்டிற்குமே மிக முக்கியமாக பயன்படுவது ஆதார் கார்டு. நம் அடையாளங்களை பதிவு செய்ய கடந்த சில வருடங்களாக இந்த முறை பின்பற்றப்படுகிறது. மேலும், பாதுகாப்பை வலுப்படுத்துவதன் காரணமாக Masked ஆதார் கார்டு அறிமுகப்படுத்தபட்டது. Masked ஆதார் கார்டு என்றால் என்ன? அவற்றை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

Masked ஆதார்:

பதிவிறக்கம் செய்யப்பட்ட மின் ஆதாரில், ஆதார் அட்டையை மறைக்கும் ஒரு வசதிதான் Masked ஆதார் கார்டு. இதில் ஆதார் எண்ணின் முதல் எட்டு எண்கள் “xxxx xxxx” என்ற எழுத்துக்களாக இருக்கும். கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். Masked ஆதாரை பதிவு செய்வதற்கு ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்க வேண்டும்.

Masked ஆதார் எவ்வாறு பதிவு செய்வது?

masked aadhaar

  • UIDAI வலைத்தளத்திற்கு சென்று “download ஆதார்” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • Aadhaar/ VID/ Enrolment ID என்பதை தேர்ந்தெடுத்து “Masked ஆதார்” என்பதை கிளிக் செய்யவும்.
  • சில விவரங்களை பதிவிடுமாறு இருக்கும். விவரங்களை கொடுத்த பிறகு “Request OTP” கொடுக்கவும். பின் ஆதார் எண் சேர்க்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு OTP வரும்.
  • OTP எண்ணை பதிவிட்டு “download aadhar” என்பதை கிளிக் செய்தால் “Masked aadhar” பதிவிறக்கம் ஆகிவிடும்.

aaaaa

  • Masked ஆதார் கார்டு பாதுகாப்பாக கடவுச்சொல் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இதற்கான password என்னவென்றால் உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களும், பிறந்த வருடமும் சேர்ந்து இருக்கும்.

இந்த Masked ஆதார் கார்டை பொது இடங்களில் உங்கள் அடையாளங்களை நிரூபிக்க பயன்படுத்தலாம். ஆனால், அரசின் சலுகைகளை பெற முடியாது. Masked ஆதார் கார்டில் உண்மையான ஆதார் எண் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் Masked ஆதார் கார்டை தவறாக பயன்படுத்த முடியாது.

loading...
Back to top button
error: Content is protected !!