ஆரோக்கியம்

தொண்டை வலியால் அவஸ்தைப்படறீங்களா? இதோ சிறந்த உடனடி தீர்வு!

தொண்டை கரகரப்பு என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தொல்லை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

பொதுவாக காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது பலருக்கு சளி பிடிப்பதுடன் தொண்டை வலியும் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பும் வரக்கூடும்.

அதற்கு மாத்திரைகளை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. சில எளிய வழிமுறைகள் உள்ளன.

அந்தவகையில் தொண்டை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.

சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடித்து வரவும். கருப்பட்டி போட்டு சூடாக குடிக்கவும்.

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை வெதுவெதுப்பான நீரில் உப்பு சிறிதளவு சேர்த்து தொண்டையில் படும்படு அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.

துளசி, வேப்பிலை, ஆடாதொடை போட்டு ஆவி பிடிக்கவும்.

அடிக்கடி சூடு நீர் போட்டு குடித்து வருவது நல்லது.

வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலியும் நீங்கும்.

சிறிதளவு வசம்பை எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் தொண்டை வலி குறையும்.

சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர தொண்டை கரகரப்பு விரைவில் குணமாகும்.

பால் இல்லாமல் தேநீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு ஓடிவிடும்.

முந்திரிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு சற்று தள்ளியே நிற்கும்.

வல்லாரை சாற்றில் அரிசித்திப்பிலியை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் வெட்டி வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து பொடி செய்து, சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு குறையும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  டீ பிரியர்களே உஷார்! மூலிகை தேநீரில் இவ்வளவு தீமைகள் இருக்கிறதா?
Back to top button
error: