தொடர்ந்து வரும் இருமலை கட்டுப்படுத்த தூதுவளை சித்தரத்தை கசாயம் உறுதுணையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை – ஒரு கைப்பிடி
சித்தரத்தை – ஒரு துண்டு
உலர்ந்த திராட்சை – 10
எலுமிச்சம் பழம் – அரை பழம்
செய்முறை:
முதலில் தூதுவளை கீரையை ஆய்ந்து சுத்தப் படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி தண்ணீர் ஊற்றி தூதுவளை, சித்தரத்தை மற்றும் உலர் திராட்சையை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்து 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து நன்கு கலக்கிக் குடிக்கவும்.
இந்தக் கசாயம் இருமலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிறுத்த உதவும் அருமருந்தாகும். இந்தக் கசாயத்தை தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh