தமிழ்நாடுதொழில்நுட்பம்

ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி..? எளிய வழிமுறைகள் இதோ..!

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் உடனடியாக உங்கள் மொபைல் எண்ணுடன் அதனை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட சிம் கார்டுகளைப் பெற்று நடைபெறும் குற்றங்களை தடுக்க இயலும்.

ஆதார் அட்டை – மொபைல் எண் இணைப்பு:

நாடு முழுவதும் பல அரசு மற்றும் தனியார் பணிகளில் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. பல முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பது இப்போது கட்டாயமாகிவிட்டது. ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெற, ஆதார் அட்டைதாரர் தனது மொபைல் எண்ணை UIDAI இல் பதிவு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய அல்லது புதுப்பிக்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆதார்-மொபைல் இணைக்கும் ஆஃப்லைன் முறை

1. ஆதார் அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகலுடன் உங்கள் UIDAI நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

2. உங்கள் மொபைல் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

3. ஸ்டோர் எக்ஸிகியூட்டிவ் வாயிலாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பபடும், சரிபார்ப்புக்காக இந்த OTP ஐ நிர்வாகியிடம் கொடுக்க வேண்டும்.

4. இதற்குப் பிறகு நிர்வாகி உங்கள் கைரேகைகளை பதிவு செய்து, உங்கள் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் உங்களுக்கு உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் அனுப்புவார்.

5. அதற்கு Y என SMS பதிலை அனுப்புங்கள், நீங்கள் இதைச் செய்தவுடன் உங்கள் e-KYC செயல்முறை நிறைவடையும்.

ஆதார்-மொபைல் இணைக்கும் ஆன்லைன் முறை:

1. UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதற்கான பதிவில் இணைக்க வேண்டிய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.

3. இதை செய்த பிறகு உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும். இந்த OTP உள்ளீட்டைச் சமர்ப்பிக்கவும்.

4. இதற்குப் பிறகு நீங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.

5. UIDAI வாயிலாக அந்த எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

6. e-KYC க்கு ஒரு ஒப்புதல் செய்தி அனுப்பப்படும், நீங்கள் இந்த ஒப்புதலைக் கொடுத்து OTP ஐ நிரப்ப வேண்டும்.

7. ஆதார் மற்றும் மொபைல் இணைப்பு குறித்து உறுதிப்படுத்தல் செய்தி உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: