தொழில்நுட்பம்

ஆதார் – பான் கார்டு ஆன்லைனில் இணைப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்!!

பெருந்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் மாதம் வரை நீடித்துள்ள நிலையில் இந்த செய்முறைகளை ஆன்லைனில் செய்யும் வழிமுறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்கு இதற்கு முன்னர் மத்திய அரசு பல முறை அவகாசம் அளித்துள்ள நிலையில், கொரோனா தொற்று நோயை கருத்தில் கொண்டு இதற்கு மேலும்,செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தகவல்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

இல்லையென்றால் இணைப்பு வெற்றிகரமாக இருக்காது. பான் மற்றும் ஆதார் அட்டையை மூன்று வழிகளில் இணைக்கலாம். இதன் பிறகு, உங்கள் ஆதார் பான் அட்டையுடன் இணைக்கப்ட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆதார், பான் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் முறையில் இணைக்கும் முறை:

 • வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளமான www.incometaxindiaefiling.gov.in க்கு செல்ல வேண்டும்.
 • வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ஆதார் இணைப்பு’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
 • இப்போது ஒரு புதிய பக்கத்தில் “நீங்கள் ஏற்கனவே இணைப்பு ஆதார் கோரிக்கையை சமர்ப்பித்திருந்தால் நிலையைக் காண இங்கே கிளிக் செய்க” என்று காண்பிக்கும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
 • இப்பொழுது உங்கள் ஆதார்-பான் நிலை இணையதளத்தில் காண்பிக்கப்படும்.
 • இதுவரை இணைக்காத நிலையில், பான்-ஆதார் அட்டையை இணைக்க அதே பக்கத்தில் கிடைக்கும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
 • அதன்பிறகு நீங்கள் எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
 • இப்பொழுது ‘LINK AADHAR’என்று கிளிக் செய்ய வேண்டும்.
 • அதன் பிறகு உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் முறை:

உங்கள் பான் மற்றும் ஆதார் ஐ எஸ்எம்எஸ் மூலம் இணைப்பதற்கு தொலைபேசியிலிருந்து UIDPAN <SPACE> 12 இலக்க ஆதார் எண்> <SPACE> <10 இலக்க பான்> ஐ பதிவிட்டு அதை 567678 அல்லது 56161 க்கு அனுப்ப வேண்டும்.

சேவை மையத்தின் மூலம் இணைக்கும் முறை:

 • உங்கள் பான் சேவை வழங்குநரான என்.எஸ்.டி.எல் அல்லது யு.டி.ஐ.டி.எஸ்.எல் சேவை மையத்தில் ஆதார் பான் இணைப்பு படிவம் 1 ஐ நிரப்ப வேண்டும்.
 • இணைப்பு விண்ணப்பத்துடன், உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையின் நகலை இணைக்க வேண்டும்.
 • இப்பொழுது உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: