ஆரோக்கியம்

பல் வியாதிகள் நீங்க சில வழிமுறைகள்!!

ஆலம் விழுதைக் கொண்டு பல் துலக்கி வர பற்கள் பலப்படும்.

இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும்.

இரண்டு துளி கிராம்புத் தைலத்தை பஞ்சில் தோய்த்து பல்வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள பல்வலி கட்டுப்படும்.

இலவங்கபொடியை கொண்டு பல்வலி உள்ள இடத்தில் துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்.

துளி, சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்து விட்டு, பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல் வலி தீரும்.

மகிழங்காயை மென்று துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப்படும்.

இரண்டு எலுமிச்சம்பழத்தை நறுக்கி காலை வெறும் வயிற்றில் உறிஞ்சிச் சாப்பிட பல் வியாதிகள் வராது.

தான்றிக்காய் தூள் கொண்டு பல்துலக்கி வர பல் வலி, பல்சொத்தை அணுகாது.

மாசிக்காய் தூளை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்கொப்புளிக்க பல்நோய் தீர்ந்து ஈறு பலப்படும்.

புளியங்கொட்டை தோல், கருவேலம்பட்டை தூள் சமமாக கலந்து உப்புத்தூளுடன் பல்துலக்கி வர பல்கூச்சம், பல்ஆட்டம், ஈறுவீக்கம் தீரும்.

கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி, வாய்புண் குணமாகும்.

வேப்பம்பட்டையை குடிநீர் செய்து இளம்சூட்டில் வாய்கொப்பளிக்க பல் வலி தீரும்.

ஆலம்பாலை காலை மாலை பல் ஆடும் இடத்தில் தடவி வர பல் ஆட்டம் நிற்கும்.

நஞ்சறுப்பான் இலைச் சூரணம் கொண்டு பல்துலக்க பற்கறை நீங்கும். பல் சுத்தமாகும்.

கொத்தமல்லி இலை அல்லது அதன் விதைகளை மென்று, வாய் கொப்புளித்துவர பல்வலி, ஈறுவீக்கம், வாய்துர்நாற்றம் நீங்கும்.

கற்பூரவல்லி இலை, துளசி இலை சேர்த்து மென்று, வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்திக் கொள்ள பல்வலி நீங்கும்.

கண்டங்கத்திரி பழத்தை சுட்டு, பொடியாக்கி, ஆடாதொடைஇலையில் வைத்து சுருட்டு போல் புகைக்க பல்சொத்தை, பல்கூச்சம் தீரும்.

சாதிக்காய் எண்ணை இரண்டு துளி பல்வலி உள்ள இடத்தில் பூச விட வலி குணமாகும்.

எருக்கம் பாலைத் தொட்டு பல்சொத்தை, உள்ள இடத்தில் பூச சொத்தை குணமாகும்.

அரத்தை தூளை சம அளவு பல்பொடியுடன் கலந்து, பல் துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்

ஒரு பங்கு எலுமிச்சைசாறுடன் இரண்டு பங்கு பன்னீர் கலந்து காலை மாலை வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

எலுமிச்சைசாறுடன் நீர் கலந்து வாய் கொப்பளிக்க ஈறில் இரத்தம் காணல் நிற்கும்.

கொழுஞ்சி வேரை சாறுபிழிந்து பஞ்சில் தோய்த்து பூச்சி விழுந்த பல்லில் வைக்க வலி நிற்கும்.

சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து சொத்தைப் பல்லில் வைக்க தீவிரமான வலி குணமாகும்.

கருவேலம் பற்பொடியில் பல்துலக்கி, மகிழ இலைக் கியாழத்தில் வாய் கொப்புளிக்க பல் நோயனைத்தும் தீரும்

பெருங்காயத்தை எலுமிச்சைச் சாற்றிலுரைத்து பஞ்சில் தோய்த்து வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குணமாகும்.

நந்தியாவட்டை வேர் சிறுதுண்டு மென்று துப்ப பல்வலி, வீக்கம் குணமாகும்.

அருகம்புல்லை மென்று, சாற்றை பல்வலியுள்ள பக்கம் ஒதுக்கிவைக்க பல்வலி நிற்கும்.

கடுக்காய்தூளுடன் சம அளவு உப்புத்தூள் கலந்து பல்துலக்கிவர பல்வலி, ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: