ஆரோக்கியம்

முடி வெடிப்பு அதிகம் இருக்கா? இதனை தடுக்க இதோ சூப்பரான டிப்ஸ்..!

முடி பிரச்சனை என்பது எல்லா காலங்களிலும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை தான். முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்றவை பருவக்காலத்துக்கேற்ப அடிக்கடி வரும் வரும் பிரச்சினைகளில் ஒன்று.

அதிலும் கூந்தல் அழகாக இருக்கும் போது முடி இழைகளில் வெடிப்பு உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லையெனில் அவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் தற்போது முடி வெடிப்பை தடுக்க கூடிய ஒரு சில டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

ரோஸ் வாட்டர்- 4 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 8 டீஸ்பூன் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு கூந்தலின் நுனிகளில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி 1 மணி நேரம் விட்டு பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள்.

எலுமிச்சை இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது கூந்தல் உடைவதையும் தடுக்க செய்கிறது. எலுமிச்சை சாறை நேரடியாக தடவ வேண்டாம். இதை தண்ணீருடன் கலந்து எலுமிச்சை சாறு கலந்து கூந்தலில் பயன்படுத்தலாம். ஷாம்புவை கொண்டு கூந்தலை அலசி எடுத்ததும் எலுமிச்சை நீரில் முடியை கழுவி எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை ஷாம்பு பயன்பாட்டுக்கு பிறகும் முடியை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முடி வளர்ச்சியில் முன்னேற்றம் பார்க்கலாம். முடி வெடிப்பும் குறைந்து வருவதை பார்க்கலாம்.

பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து அதை அவகேடோ பழம் மசித்து சேர்த்து மென்மையான பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும். இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி விடவும். பிறகு அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இது முடி வெடிப்பை தடுத்து முடிக்கு மென்மையையும் அளிக்கும்.

தேங்காயெண்ணையை இலேசாக சூடாக்கி முடியின் வேர் முதல் நுனி வரை தடவி பிறகு 30 நிமிடங்கள் விட்டு விடவும். தலைக்கு ஹேர் கவர் போடலாம். இதனால் எண்ணெயின் மருத்துவ குணங்கள் கூந்தலுக்குள் ஊடுருவும். பிறகு கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுத்தால் கூந்தலில் வித்தியாசத்தை பார்ப்பீர்கள்.

இதையும் படிங்க:  உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஜுஸ் வகைகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: