ஆரோக்கியம்தமிழ்நாடு

நகங்கள் உடையாமல் அழகாக இருக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்..!

பெண்கள் நகத்தை அழகாக வளர்த்து அதனை ஷேப் செய்து நகப்பூச்சு போடுவதும் ஒருவித அழகுதான்.

இருப்பினும் நகங்கள் பல்வேறு காரணங்களால் வலிமை இழந்து உடைய தொடங்கும். இதனால் உங்கள் விரல்களின் அழகு பாதிக்கப்டுகிறது.

இவற்றிற்கு சரியான ஊட்டச்சத்து கொடுக்கும்போது இந்த பாதிப்பு களையப்பட்டு நகங்கள் வலிமையாக வளர தொடங்குகிறது.

அந்தவகையில் நகங்கள் உடையமால் இருக்க என்ன மாதிரியான வழிமுறைகளை கையாளலாம் என பார்ப்போம்.

நகங்களை வெட்டும் முன் அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டால் சுலபமாக வெட்டலாம்.
நல்லெண்ணெய்யை சூடுபடுத்தி மசாஜ் செய்தால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

இளஞ்சூடான தண்ணீரில் துளசி, புதினா மற்றும் வேப்ப இலையை போட்டு நகங்கள் மூழ்குமாறு -10-15 நிமிடங்கள் வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.

ஆரஞ்சுப்பழத்தோலை காயவைத்து பொடியாக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து எண்ணெயில் குழைத்து நகங்களில் தடவி வந்தால் பளபளப்பு கூடும்.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகத்தை சுத்தப்படுத்தினால் பளபளவென்று இருக்கும்.

நகங்களை பராமரிக்க கால்சியம் சத்துள்ள உணவுகள் உண்பது மிக அவசியம்.

எலுமிச்சைச்சாறு சிறிதளவு எடுத்து நகங்களில் அப்ளை செய்ய வேண்டும். தொடர்ந்து அப்படிச் செய்துவர நகங்கள் வலிமை பெறும். எலுமிச்சையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சி நகங்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

ஆயில் மசாஜ் நகங்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து லேசாகச் சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு நகத்தின் வேர்ப் பகுதியிலும் விட்டு மசாஜ் பண்ண வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இருபது விநாடிகள் மசாஜ் கொடுத்தால் போதும். மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கைகளைக்கழுவிக் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: