ஆரோக்கியம்

கைகளை அழகாக பராமரிக்க.. இதோ சூப்பரான டிப்ஸ்..!

அன்னாசியை அரைத்து, அதனை கைகளில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.கைகள் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கும்.

சந்தன பவுடர், அரிசி மாவு, சோயா மாவு, கஸ்தூரி மஞ்சள் தலா 2 தேக்கரண்டி எடுத்து, பன்னீருடன் கலந்து கைகளில் பூசி வந்தால், சொரசொரப்பு நீங்கி பளபளப்பு உண்டாகும்.

பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கைகளில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் பாலில் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.கைகள் மென்மையாகும்.

எலுமிச்சை சாற்றினை கருமையாக இருக்கும் கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சை சாறானது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

கிளிசரின் மற்றும் பன்னீர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் அரோமா எண்ணெய் 2 சொட்டு கலந்து கைகளில் மசாஜ் செய்ய கை மிருதுவாக இருக்கும்.

தயிரை கைகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த முறை வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. தக்காளி சாற்றினை கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் பொலிவோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெய்/விளக்கெண்ணெயை/ஆலிவ் ஆயில் காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், நகங்களுக்கு எண்ணெய் பசை கிடைத்து, நகங்கள் வலிமையோடு இருக்கும்.

சோப் லிக்யூட் 2 ஸ்பூன், மணல் (நைசாக சலித்தது)அரை டீஸ்பூன், இவை கலந்து கைகளில் தேய்த்து, மசாஜ் செய்து கழுவலாம்.சொரசொரப்பு நீங்கும்.

மஞ்சள் தூளை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிப்படைந்த இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.இதை வாரம் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அரை கப் தயிரை, 5 நிமிடங்கள் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ கைகள் மென்மையாகும்.

2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து, கைகளில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.கைகளின் சுருக்கம் மறையும்.

வாழைப்பழத்தை மசித்து, அதனை கைகளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.இது சுருக்கங்களை மறையச் செய்யும்.

ஓடிகொலோன் 2 டீஸ்பூன் லிக்யூட் பாரபின் 1 டீஸ்பூன் சேர்த்து கைகளில் தடவி, 10 நிமிடம் கழித்துக் கழுவினால் வியர்க்காது, கையும் மென்மையாகும்.

ஆலிவ் ஆயிலை தினமும் கைகளில் தடவி குறைந்தது 30 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சரும செல்கள் ஊட்டம் பெற்று, வறட்சியால் சருமம் சுருக்கமடைவது தடுக்கப்படும்.

கை விரல்களை விளக்கெண்ணெயில் 10 நிமிடம் வைத்திருந்தால் விரல் பளபளப்பாகும்.தேன் நிரம்பிய கிண்ணத்திலும் விரல்களை நனைக்கலாம்.

சப்பாத்தி மாவு பிசைந்த பின் கைகளை கழுவாமல், கைகளில் சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், கைகளில் உள்ள அழுக்குகள் நீங்கும்,

தர்பூசணியை அரைத்து கைகளின் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சுருக்கங்கள் வேகமாக மறையும்.

ஒரு கப் ஆலிவ் எண்ணெயை, லேசாக சூடாக்கி கைகளை அதில் வைத்து, இரண்டு நிமிடம் நகங்களை மசாஜ் செய்து பஞ்சால் துடைக்கவும்.நகங்கள் உடையாமலிருக்கும்.

கைகளுக்கு ஸ்கரப் செய்ய ஓட்ஸ், தேன், பால் மற்றும் தண்ணீரை கலந்து, கைகளில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் போய்விடும்.

முல்தானி மெட்டி,பன்னீர் ,ஆரஞ்சுப் பழச்சாறு தலா 2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு 5 சொட்டுகள் கிளிசரின், தேன் சில துளிகள் கலந்து பிரஷ்ஷால் கைகளில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி, குளிர்ந்த நீரில் கழுவவும்.கைகளின் கருமை நிறம் மாறும்.

வெள்ளரிக்காயை அரைத்து, கைகளின் மேல் தடவி 30 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கைகளில் உண்டான சுருக்கங்களும் மறையும்.

சில துளிகள் எலுமிச்சம்பழச் சாறை, ஒரு பிரஷ்ஷில் நனைத்து விரல் நகங்களில் தடவி, சில நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ நகங்கள் வெளுக்காமலிருக்கும்.

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன் பின் கைகளை நன்றாகதுடைத்துவிட்டு, கைகளுக்கு கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும்.

அதே போல் தினசரி ஒவ்வொரு நாள் இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுக்கொள்ளவும்.

குளிக்கும் முன்பு கைகளுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங்கள். குளித்த பின்பு மறக்காமல் ஹேண்ட் அல்லது பாடி லோஷனை தடவுங்கள்.

கைகளில் இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து அவற்றைக் கழுவியபின் மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும். அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் இரத்த ஓட்டம் சீராகும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறை யாவது இவ்வாறு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: