ஆரோக்கியம்தமிழ்நாடு

பாதச்சுருக்கமா? இதனை எளியமுறையில் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்..

முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள நினைக்கும் பெண்கள் பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வசீகர முகம் கொண்ட பெண்கள் கூட பாதத்தை முறையாக பராமரிப்பதில்லை.

இதனால் பாதங்களில் சுருக்கம் விழுந்து வெடிப்புகளோடு வறண்டு காணப்படுவதுண்டு.

இதனை போக்க பணத்தை செலவழிப்பதை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் இவற்றை போக்க முடியும்.

தற்போது பாதச்சுருக்கத்தை போக்க என்ன பண்ணலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு – 3 தேக்கரண்டி
  • ஆப்பிள் சீடர் வினிகர் – அரை டீஸ்பூன் அளவு
  • தயிர் -5 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அரிசி மாவுடன் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக குழைக்கவும்.

இந்த கலவை நல்லா தலதலன்னு இருக்கனும், தயிர் பற்றாக்குறை இருந்தாலும் மீண்டும் தேவையான அளவு சேர்க்கலாம். பாதங்களை மிதமான வெந்நீரில் வைத்து 10-15 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும் .

பிறகு இந்த கலவையை பாதங்களில் தடவி மெதுவாக தேய்த்து தேய்த்து மசாஜ் செய்தபடி தடவவும்.

கணுக்காலின் கீழிருந்து பாதங்களின் மேல் பகுதி கீழ்பகுதி என அனைத்து இடங்களிலும் இதை தடவி விட வேண்டும்.

பிறகு பாதத்தை கீழே இறக்காமல் வைத்திருந்து உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து moisturizer தடவவும்.

Back to top button
error: Content is protected !!