ஆரோக்கியம்

மலச்சிக்கலா? கவலையை விடுங்க.. இதனை போக்க இதோ சில அற்புத வழிகள்!!

தற்போது பெரும்பாலான மக்கள் அன்றாடம் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் மலச்சிக்கல்..இதற்கு நமது தற்போதைய நவீன வாழ்க்கை முறையே முக்கிய காரணம்.

ஜங்க் உணவுகள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் அதிகமாக உணவு உண்ணுதல் போன்றவை இப்பிரச்சனைக்கான சில பொதுவான காரணங்களாகும்

இதனை ஆரம்பத்திலே போக்குவது சிறந்தாகும். இல்லாவிடின் இது பாரிய பிரச்சினையை உருவாக்கிவிடும்.

அந்தவகையில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட ஆயுர்வேதம் கூறும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

திரிபலா டீ குடிக்கலாம் அல்லது கால் டீஸ்ஸ்பூன் திரிபலா பொடியுடன், அரை டீஸ்ஸ்பூன் மல்லி விதை மற்றும் கால் டீஸ்ஸ்பூன் ஏலக்காய் விதை ஆகியவற்றை எடுத்து நன்கு அரைத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.

ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை ஒரு கப் சூடான பாலில் சேர்த்து இரவு தூங்கும் முன் குடிப்பது, மலச்சிக்கலைப் போக்கும்.

அரை கப் பேல் பழத்தின் விழுதுடன், ஒரு டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கலந்து, தினமும் மாலை வேளையில் உட்கொள்வது, மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். வேண்டுமானால் புளி தண்ணீர் மற்றும் வெல்லத்தை சேர்த்து பேல் சர்பத் தயாரித்தும் குடிக்கலாம்.

ஒரு டீஸ்பூன் அதிமதுர வேர் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து, ஒரு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு கலந்து குடியுங்கள். அதிமதுரம் குடல் செயல்பாட்டை ஊக்குவிக்க அறியப்படும் ஓர் பொருள்.

ஒரு டீஸ்பூன் வறுத்த சோம்பை இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது மலமிளக்கியாக செயல்படும். சோம்பில் உள்ள எண்ணெய்கள் இரைப்பை நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், செரிமானத்தை சிறப்பாக தொடங்க உதவும்.

அத்திப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து சாப்பிடுவது, மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

சீனா புல் அல்லது அகர்-அகர் என்பது ஒரு உலர்ந்த கடல்பாசி ஆகும். இதை துண்டுகளாக வெட்டி, பாலில் போட்டு கொதிக்க வைக்கும் போது, அது ஜெல் போன்று மாறும். இத்துடன் தேன் சேர்த்து உட்கொண்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கொத்தமல்லியின் வரலாறும் அதன் பலன்களும்!!
Back to top button
error: