ஆரோக்கியம்தமிழ்நாடு

சருமத்தை புத்துணர்ச்சியுடனும் அழகுடனும் வைத்து கொள்ளனுமா? இதோ அற்புதமான டிப்ஸ்..!

பொதுவாக நம்மில் பல பெண்களுக்கு எப்போதும் அழகுடன் வேண்டும் என்கிற எண்ணம். இதற்கு என்னதான் பணம் செலவழித்து கிறீம்களை வாங்கி போட்டாலும் ஒரு சிலருக்கு முகத்தின் பொலிவை மீண்டும் கொண்டு வர இயலாது.

அந்தவகையில் புத்துணர்ச்சியுடனும் அழகுடனும் இருக்க ஆசைப்படும் பெண்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்தாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது முகத்தில் உள்ள சுருக்கங்களையும், முதுமைக் கோடுகளையும் தடுக்கும்.

அவகேடோவை தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் முகம் பட்டுப் போன்று வறட்சியின்றி அழகாக இருக்கும்.

கடுகு மாஸ்க் செய்யும் போது, கடுகை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். ஆனால் கடுகை பயன்படுத்தும் முன் அதனை கையில் தடவி சோதனை செய்து பின் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சிலருக்கு கடுகு அரிப்பை ஏற்படுத்தும்.

சருமம் உள்ளவர்கள், மயோனைஸ் உடன் முட்டையை சேர்த்து நன்கு கலந்து, மாஸ்க் போட்டால் நல்ல பலனைக் காணலாம்.

மஞ்சள் தூளில் பால் சேர்த்து கலந்து அன்றாடம் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் தங்கியுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, முகம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.

Back to top button
error: Content is protected !!