உங்கள் ட்விட்டர் கணக்கு லாக் ஆகி விட்டதா? இதோ மீட்டெடுப்பதற்கான எளிய வழிமுறைகள்..!

சிலர் தங்களது ட்விட்டர் கணக்கில் இருந்து விமர்சனங்களுக்கு உள்ளாகிய கருத்துக்களை தெரிவிப்பர். இது ட்விட்டரின் விதிமுறைக்கு மீறிய செயலாகும். எனவே ட்விட்டர் அந்த கணக்கை லாக் செய்து விடும். தற்போது அந்த லாக் ஆன கணக்கை எப்படி மீட்டெடுப்பது பற்றிய தகவலை இதில் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருவது தான் ட்விட்டர். இதில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவார்கள். சிறியவர்கள் முதல் பெரிய பிரமுகர்கள் வரை இதில் தங்களது கணக்கை துவங்கியுள்ளனர். மேலும் நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் இதில் பல கருத்து போர்கள் நடக்கும். சில நேரங்களில் பெரிய பூகம்பமே இதன் மூலம் கிளம்பும் அந்த அளவிற்கு மிக முக்கியமா தளம் இது.
இந்த தளத்தில் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பர். இல்லையெனில் வன்முறையை தூண்டும் முறையில் கருத்துக்களை பதிவிடுவர். இதுபோல் ட்விட்டரின் விதிமுறையை மீறும் செய்தியை ட்விட்டர் நிறுவனம் நீக்கி வரும். இது தொடர்ந்து நீடித்தால் ட்விட்டர் நிறுவனம் அந்த கணக்கை முடக்கி விடும். தற்போது அந்த முடக்கப்பட்ட கணக்கை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்த வழிமுறைகளை இதன் மூலம் அனைவரும் தெரிந்துகொள்ளலாம்.
கணக்கை மீட்டெடுக்கும் வழிமுறை:
- முதலில் உங்கள் ட்விட்டர் கணக்கிற்குள் நுழையவும்.
- உங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் ஆப்ஷனை தேடவும்.
- அங்கே உள்ள தொடங்கு என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு verification code ஒன்று வரும்.
- அதனை சமர்ப்பிக்கவும். பின்பு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ட்விட்டர் சில வழிமுறைகளை அனுப்பும்.