தமிழ்நாடு

ரேஷன் கார்டில் நீக்கப்பட்ட பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்!!

ரேஷன் அட்டையில் ஆதார் இணைக்கப்படாத பட்சத்தில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்படும். அவ்வாறு நீக்கப்பட்ட பெயரை மீண்டும் சேர்ப்பது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை முதலியன மலிவு விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கென தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ரேஷன் அட்டையில் பெயர் சேர்ப்பது குறித்து காணலாம்.

ஆதார் முக்கிய ஆவணமாக மாறி வரும் நிலையில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதார் இணைக்கப்படாத பட்சத்தில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்படும். மேலும் வேறு ரேஷன் கார்டில் உங்கள் பெயர் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தாலோ பெயர் நீக்கப்படும். அதனை தொடர்ந்து ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் இறந்த பிறகும், உங்கள் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கலாம்.

அவ்வாறு பெயர் நீக்கம் செய்யப்பட்டால் அதற்காக வருந்த தேவை இல்லை. அவ்வாறு ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கபடும் பட்சத்தில் ரேஷன் கார்டுக்கு மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் மீண்டும் ரேஷன் கார்டை பெறலாம். அதேபோல் திருமணத்திற்கு பிறகு மனைவி பெயரையும், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் பெயரையும் ரேஷன் கார்டில் சேர்க்கலாம். மேலும் ரேஷன் கார்டில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஆதார் இணைக்காதவர்கள் விரைவில் இணைக்கும்படி கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்றைய (02-12-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
Back to top button
error: