தொழில்நுட்பம்

ATM கார்டு தொலைந்து போனதா அதை லாக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

பண பரிமாற்றம் செய்வதற்கான முக்கியமான சாதனமாக கருதப்படும் ATM அட்டைகள் தொலைந்து விட்டால், அந்த ATM கணக்கை லாக் செய்தால் மட்டுமே அவை பாதுகாக்கப்படும். அதன் படி உங்கள் ATM அட்டைகளை லாக் செய்யும் முறைகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் பண பரிமாற்றத்துக்காக ATM கார்டுகளை உபயோகித்து வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது செலவிடப்படும் நேரம் ATM மூலம் பணம் எடுக்கும் போது மிச்சமாகிறது. இது தவிர இந்தியாவின் எந்தவொரு மூலையில் இருந்தாலும், வங்கி ATM கார்டுகள் மூலம் நம் தேவைகளுக்காக பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இவை பாதுகாப்பானதும் கூட. சில நேரங்களில் இந்த கார்டுகளை நாம் தொலைக்க நேரிட்டால் உடனடியாக அந்த கார்டை பிளாக் செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த ATM கார்டுகளில் இருந்து உங்கள் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. இதற்காக ATM கார்டுகள் தொலைந்ததும், உங்கள் கணக்கை லாக் செய்யும் வழிமுறைகளை SBI வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அந்த வகையில் உங்கள் மொபைல் மூலமாகவே 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு கால் செய்து தொலைந்துபோன ATM கார்டை லாக் செய்யலாம். அதற்கு பின்னாக உங்கள் கார்டு லாக் செய்யப்பட்டால், மெசேஜ் அனுப்பப்படும். இது தவிர புதிய ATM கார்டுக்கு விண்ணப்பிக்க அதே எண்ணுக்கு மீண்டும் அழைக்கலாம். அப்போது IVR மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த சேவைகளில் 1, 2, 8, 9 உள்ளிட்ட எண்களை அழுத்துமாறு கேட்கப்படும். அதற்கேற்றவாறு எண்களை அழுத்தி புதிய கார்டுக்கு அப்ளை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: