தொழில்நுட்பம்

ஆன்லைன் மூலம் PAN கார்டு பெறுவது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்!!

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பான் கார்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணையதள வழிமுறைகளை இப்பதிவில் காண்போம். அதனை பின்பற்றி எளிதாக 10 நிமிடத்தில் பான் கார்டு பெறலாம்.

இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் என்பதே பான் கார்டு. இதில் வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் 10 இலக்கங்கள் கொண்ட நிரந்தர கணக்கு எண் இடம் பெற்றிருக்கும். அனைத்து வங்கி பரிவர்தனைகளுக்கும், அரசின் வரிகளை செலுத்துவதற்கும் வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டு உதவுகிறது. தற்போது தனி மனிதனின் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. மேலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது.

முன்பெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்.பான் காரட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை மாற்றி கொள்ளலாம். பான் கார்ட்டை நீங்கள் ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். இவ்வளவு முக்கியம் வாய்ந்த பான் கார்டு திடீரென தொலைந்துவிட்டால் 10 நிமிடங்களில் நீங்கள் இ-பான் கார்டு வாங்கி விடலாம்.

இ- பான் பெறும் வழிமுறைகள்:

முதலில் NSDL இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் இ-பான் கார்டு என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்ததாக ‘New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும். அதில் தோன்றும் பக்கத்தில் உங்கள் பான் எண்ணை பதிவிடவும். மேலும் ஆதார் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP SEND செய்யவும்.
பின்னர் கட்டணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் 8.26 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
பான் கார்டு PDF வடிவில் கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: