தமிழ்நாடு

காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி – முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கைகள் மீதான கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பல்வேறு தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அதில் காவல்துறை குறித்த அறிவிப்பில் காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஆகஸ்டு 20ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் படி கடைசி நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்றைய தினம் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுவதுடன், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வு குறித்த தீர்மானங்கள் வெளியான நிலையில், காவல்துறை குறித்த விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது காவல்துறையினருக்கு ஏராளமான சலுகைகள் பற்றி தெரிவித்துள்ளார்.

அதில் பேசிய முதல்வர் கூறுகையில், காவலர்கள் நலன் பேணுவதில் திமுக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆட்சியில் வன்முறைகளை சாதி சண்டைகள் இல்லை. துப்பாக்கி சூடு இல்லை. அராஜகம் இல்லை இதை ஏற்படுத்திக் கொடுத்த காவல் துறைக்கு நன்றி. கொரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து மக்களை காவல்துறையினர் பாதுகாத்தனர். காவலர்களின் வீரதீர செயல்களுக்கான பதக்கத்தை கலைஞர் அரசு வழங்கி உள்ளது. மேலும் தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். பல போராட்டங்களில் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் 5 ஆயிரத்து 570 வழக்குகள் வாபஸ் பெற்றுள்ளது.

கடந்த ஆட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்தார்களே தவிர, பாராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் தனியாக ஒதுக்கி கேமராக்களை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க செயலி உருவாக்கப்படும்.பொதுமக்கள் காவல் அதிகாரிகளை காணொளியில் சந்தித்து புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 275 கோடியில் 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்.

இதையும் படிங்க:  1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் திட்டம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: