தமிழ்நாடுமாவட்டம்

உதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனிப்பொழிவு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி பொழிவு காணப்படும். ஆனால் இம்முறை நவம்பர் மாதம் முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை புயல் மற்றும் பருவ மழை பெய்து வந்ததால் உறைபனி பொழிவு காணப்படவில்லை.

இந்நிலையில், உதகையில் தாமதமாக உறைபனி பொழிவு கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக துவங்கியுள்ளது. காலை நேரங்களில் உதகை தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், தலை குந்தா, எச்.ஏ.டி.பி. மைதானம் போன்ற சமவெளி பகுதிகளில் அரை அங்குலத்திற்கு பச்சை புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல உறைபனி பொழிவு காணப்படுகிறது.

பனி பொழிவால் காலையில் 9 மணிக்கு மேல் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடிகிறது. கடுங்குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மலை பகுதியில் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் பணி பொழிவை பொருட்படுத்தாமல் புல் மைதானங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் வரும் நாட்களில் உறைபனி பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!