இந்தியா

மும்பையில் பெய்த கடுமையான மழை.. மண்சரிவில் 25 பேர் பலி..!

மும்பையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 25 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக கட்டடங்களின் சுவர்கள் இடிந்து வீழ்ந்ததுடன் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மும்பையின் கிழக்கு மற்றும் புறநகர் பகுதிகளிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமது கைகளால் மண்ணை தோண்டி சடலங்களை எடுக்கும் காட்சிகளை சர்வதேச ஊடகங்களில் பார்க்கக்கூடியதாய் உள்ளது.

மண் மற்றும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி கொண்டு இருக்கலாம் என மீட்பு பணியாளர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

மும்பை பகுதியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 11 வீடுகளின் சுவர்கள் இடிந்து வீழ்ந்ததாக மும்பை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மண் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த அனுதாபங்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அதிகளவான கனமழை பதிவாகும் என்றும் மாநில வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: