தமிழ்நாடு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை மீனம்பாக்‍கம், கிண்டி, ஈக்‍காட்டுத் தாங்கல், கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. நேற்று முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மிதமான மழைப்பொழிவு பதிவானது. இருப்பினும் நேற்றிரவு வறண்ட வானிலையே காணப்பட்டது.

ஆனால், இன்று அதிகாலையில் 5 மணிக்‍குப் பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கூடியமழைப் பொழிவு காணப்பட்டது.

இதையும் படிங்க:  சுவை நிறைந்த நெத்திலி மீன் தொக்கு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: