தமிழ்நாடு

அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று திருவள்ளூர், வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, திருப்பத்தூர், நீலகிரி, கோயம்புத்தூர்‌, சேலம்‌, கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

18.08.2021, 19.08.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.08.2021: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.08.2021: திருவண்ணாமலை, சேலம்‌, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்:

17.08.2021, 18.08.2021: வடக்கு ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

17.08.2021, 18.08.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்:

17.08.2021 முதல்‌ 19.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்துடன், இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்துடன் வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

இதையும் படிங்க:  இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – அதிமுக குற்றச்சாட்டு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: