ஆரோக்கியம் நிறைந்த தயிர் பழ சாலட்..!

கோடைக்காலத்தில் உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள உதவும் மிக முக்கிய உணவு தயிர். தயிரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. தயிருடன் விருப்பமான பழங்கள் சேர்த்து ரிலாக்ஸ் டைமில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த சாலட் செய்து சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறுங்கள்.
செய்முறை
ஒரு கப் தயிருடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கப் விருப்பமான பழத்துண்டுகளை இதனுடன் சேர்த்து நன்றாகக் கலந்து சாப்பிடவும். இதை ஃப்ரிட்ஜில் குளிரவைத்தும் சாப்பிடலாம்.
சிறப்பு
கால்சியத்தின் சுரங்கமான தயிரில் குடலுக்கு நன்மை விளைவிக்கும் நல்ல ஜீரண சக்தியைத் தரும். கோடையின் தாக்கத்தைக் குறைக்கும்.