தமிழ்நாடுபொழுதுபோக்கு

ஆரோக்கியம் நிறைந்த பொன்னாங்கண்ணிக் கீரை சூப்..!

பொன்னாங்கண்ணிக் கீரையினைப் பொரியலாக கூட்டாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் சூப்பாக எடுத்துக் கொள்வதே சிறந்த பலனைக் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்

  • பொன்னாங்கண்ணி கீரை – 1 கட்டு,
  • இஞ்சி – ஒரு துண்டு,
  • பூண்டு- 3 பல்,
  • மிளகு – 1 ஸ்பூன்.
  • தனியா – 1 ஸ்பூன்,
  • உப்பு – தேவையான அளவு,

செய்முறை

இஞ்சியின் தோலைச் சீவவும், பூண்டினை தோல் உரித்துக் கொள்ளவும். பொன்னாங்கண்ணிக்கீரையினை அலசி ஆய்ந்து கொள்ளவும்.

அடுத்து மிளகு மற்றும் தனியாவை ஒன்றிரண்டாக நசுக்கவும். இஞ்சி- பூண்டினையும் ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இஞ்சி, பூண்டு, உப்பு, மிளகு, தனியா போட்டு கொதிக்கவிடவும்.
அடுத்து கொதித்த கலவையில் பொன்னாங்கண்ணி கீரையினைப் போட்டு கொதிக்கவிட்டு இறக்கினால் பொன்னாங்கண்ணிக் கீரை சூப் ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: