ஆரோக்கியம்தமிழ்நாடுபொழுதுபோக்கு

அனைத்து சத்துக்களும் நிறைந்த, ஹெல்த்தியான “முருங்கை கீரை முட்டை பொரியல்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்..!

அதிக சத்துக்கள் நிறைந்துள்ள ரொம்பவே ஹெல்த்தியான டேஸ்டியான ஒரு ரெசிபி தாங்க இன்னைக்கி நாம பாக்க போறோம். நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச முருங்கை கீரையை எப்படி சுவையாவும் அதனோட சத்து குறையாமலும் செய்யலாம்னு பாக்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவிற்கு பதிலாக இந்த முருங்கை கீரையை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

murungai thing

  • முருங்கை கீரை – 3 கைபிடியளவு
  • தேங்காய் துருவல் – தேவைக்கேற்ப
  • மிளகு தூள் – 1 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • சீரகம் – சிறிதளவு
  • வெங்காயம் – 2
  • முட்டை – 3
  • உப்பு – தேவைக்கேற்ப்ப
  • எண்ணெய் அல்லது நெய்

செய்முறை:

முதலில் முருங்கை கீரையை கொழுந்தாக மூன்று கைப்பிடி அளவு எடுத்து சுத்தமா அலசி வைத்துகொள்ள வேண்டும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்தவுடன் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

murungai sei 2

வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்த கீரையை கொட்டி மூடி வைக்க வேண்டும். கீரை சுருண்டு வதங்கி பச்சை வாசனை போனவுடன், முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். அதனுடன் சுவைக்கேற்ப்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்க்க வேண்டும். முட்டை, கீரை, மசாலா அனைத்து ஒன்றாக சேர்ந்து வதங்கியவுடன் மேலே தேங்காய் துருவலை தூவி இறக்க வேண்டும்.

murungai keera

முருங்கை கீரையில் அதிக கால்சியம் சத்து உள்ளது. காலை உணவாக இதை எடுத்துக்கொள்ளும் போது நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் உள்ளவை. பொதுவாக, முருங்கை கீரை கசப்பாக இருக்கும் என்று குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இவ்வாறு, செய்து கொடுக்கும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

loading...
Back to top button
error: Content is protected !!