பொழுதுபோக்குதமிழ்நாடு

ஹெல்த்தியான, மொறுமொறு ” கிராமத்து கம்பு தோசை” ரெசிபி – வாங்க அசத்தலாம்

எப்பவும் ஒரே மாதிரி அரிசி மாவு தோசையே செய்யாம கொஞ்சம் புது டேஸ்ட்ல ஹெல்த்தியான கம்பு தோசை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். கம்பு அதிக சத்துக்கள் நிறைந்தது. ஒல்லியா இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் அனைவருமே கம்பு எடுத்துக் கொள்ளலாம். நம் முன்னோர்கள் எல்லாம் கம்பு, ராகி, வரகு போன்ற சிறுதானிய வகைகளை தான் அதிகமா சாப்பிடுவாங்க.

தேவையான பொருட்கள்:

dhosa thing

  • கம்பு – ஒரு கப்
  • பச்சரிசி – ஒரு கப்
  • உளுந்து – 1/2 கப்
  • வெந்தயம் – 3 ஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

dhosa sei 1

கம்பை நன்றாக கழுவி ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்தாலே போதுமானது. இரண்டையும் நன்றாக கழுவி மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும். அரைத்து உப்பு கலந்து ஒரு மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

dhosa sei 2

ஒருமணிநேரம் கழித்து தோசை கல்லை நன்றாக சூடேற்றி மாவை ஊற்றி நல்ல எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக வேக வைக்கவும். இந்த தோசையை தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி சேர்த்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். தேவைப்பட்டால் அரைத்து புளிக்க வைத்த மாவில் தேவையான காய்கறிகளை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வெஜ்-கம்பு தோசை செய்து சாப்பிடலாம்.

dhosa sei

ஓன்று அல்லது இரண்டு தோசை சாப்பிட்டாலே போதுமானது பசி எடுக்காது. சாம்பார், வெஜ்-குருமா போன்றவற்றுடனும் சாப்பிடலாம் மிக சுவையாக இருக்கும். உடல் எடை குறைக்க நினைப்பர்களுக்கு சிறந்த உணவு. குறைவான கார்போஹைட்ரேட் உள்ளதால் வாரத்தில் மூன்று நாள் காலை உணவாக அல்லது இரவு உணவாக இரண்டு தோசை எடுத்துக்கொள்ளலாம்.

loading...
Back to top button
error: Content is protected !!