ஆரோக்கியம் நிறைந்த கேரட் தயிர் பச்சடி..!

அசைவ பிரியாணியோ அல்லது சைவப் பிரியாணிகளுக்கோ வைத்து சாப்பிடும் வகையிலான தயிர் பச்சடியினை கேரட் கொண்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் – 1 கப்
கேரட் – 2
உப்பு – ½ ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
உளுந்து – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகம் -1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை .மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, சேர்த்து நன்கு ஸ்பூனால் அடித்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், கேரட் துருவல், சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இந்த கேரட் கலவையினை தயிர்க்கலவையில் சேர்த்துக் கலந்தால் கேரட் தயிர் பச்சடி ரெடி..