முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் போதிய தூக்கமின்மை, முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் அவை முகத்திற்கு பொலிவான தோற்றத்தை தர இயலாது. இதற்காக நாம் பியூட்டி பார்லர் செல்லமாலே வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதனை எளிதில் போக்க முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
2 துண்டு பப்பாளியை எடுத்து கொண்டு நன்றாக மசித்து 1 ஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இறந்த செல்களை உடனடியாக அகற்றி விடலாம்.
காபி பொடியுடன் தேனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் இறந்த செல்கள் விரைவிலே நீக்கி விடும்.
2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலசவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்ட்ராவ்பெரியை நன்றாக அரைத்து கொண்டு அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். ஸ்ட்ராவ்பெரியில் உள்ள வைட்டமின் சி, இறந்த செல்களை அகற்றி பொலிவை தரவல்லது.
1 ஸ்பூன் சூரிய காந்தி எண்ணெய்யுடன் 1 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடம் கழித்து முகத்தை அலசவும். இதில் முட்டையின் வெள்ளை கருவிற்கு இறந்த செல்களை அகற்றும் தன்மை உள்ளதாம்.
1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh