சமையல் அறையில் முக்கிய அங்கம் வகிக்கும் வெந்தயம் நம் உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் பல பிரச்சனையிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் இப்போது இந்த வெந்தயத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வெந்தயக் கீரையை பயன்படுத்தி ஒரு யூஸ் ஃபுல்லான ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வெந்தயக்கீரை – 1/4 கிலோ
- தயிர் – 1 கப்
இந்த ஹேர் பேக் செய்வதற்கு தேவையான வெந்தயக் கீரைகளை எடுத்து அதை சுத்தமாக கழுவி கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தய கீரை மற்றும் ஒரு கப் தயிரை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது நாம் தயார் செய்து வைத்துள்ள வெந்தயக் கீரை ஹேர் பேக்கை நம் தலையில் அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடம் வரை ஊற விடவும். பிறகு ஹேரை ஷாம்பு யூஸ் பண்ணாமல் வாஷ் செய்யவும். இந்த வெந்தயக்கீரை ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு முறை தொடர்ந்து நம் தலையில் அப்ளை செய்து வருவதன் மூலம் நம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும்.