நமது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பல வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக நமது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கக் கூடாது. ஏனெனில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் மூளையின் பங்கு இருக்கிறது.
நல்ல நினைவாற்றலுடன் இருப்பதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூளையை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் உணவுகள் குறித்த விவரங்களை காண்போம்.
நாம் உண்ணும் உணவு நமது மூளையின் அமைப்பு மற்றும் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே மூளையை அதிகரிக்கும் உணவுகளை உண்பது குறுகிய கால மற்றும் நீண்ட கால மூளையின் செயல்பாட்டிற்கு உதவும். இது செறிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
லெதிசின் கொண்ட உணவுகளை உட்கொள்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கோதுமை, முட்டையின் மஞ்சள் கரு, கொட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், கோலின் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெண்ணெய், ஆரஞ்சு, முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்களில் கோலின் காணப்படுகிறது. இதனால் ஆரோக்கியமான நரம்பு மண்டலம் மற்றும் நினைவாற்றல் மேம்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மூளை ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியம், எனவே இரவில் நல்ல தூக்கத்தை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.