மருக்கள் கழுத்து, முகம், மார்பு பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகும். சருமத்தை கெடுக்கும் இந்த வகையான மருக்கள் நமது அழகையும் சேர்த்து கெடுக்கிறது. இதனை நீக்க இந்த எளிய இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும் நிச்சயம் பலன் கிடைக்கும். இப்போது மருக்களை எப்படி போக்குவது என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்..
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்
- Advertisement -
ஆப்பிள் வினிகரை மருக்களுக்கு பயன்படுத்துவது அதனை வேரோடு அகற்ற உதவும். காட்டன் பஞ்சின் உதவியுடன் தினமும் குறைந்தது 3 முறை மருக்கள் மீது ஆப்பிள் வினிகரை தடவ வேண்டும். இப்படி செய்து கொண்டே இருப்பதன் மூலம் சில நாட்களில் மருக்கள் கருமையாகி அதனைச் சுற்றியுள்ள தோல் வறண்டு, அது வேரோடு விழுந்து விடும்.
பல்வேறு மருத்துவப் பண்புகள் நிறைந்த பூண்டை நீங்கள் மருக்களை நீக்கப் பயன்படுத்தலாம். பூண்டை தோல் உரித்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டி அதனை மருக்களின் மீது தேய்க்க வேண்டும். அல்லது பூண்டை பேஸ்டாக செய்து மருக்கள் மீது தடவலாம். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் மருக்கள் வேரோடு விழுந்து விடும்.
- Advertisement -
எலுமிச்சை சாறை காட்டன் துணியில் நனைத்து மருக்கள் மீது தடவலாம். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் மருக்கள் விரைவில் உதிர ஆரம்பிக்கும்.
உருளைக்கிழங்கு சாறை மருக்களின் மீது தேய்ப்பதன் மூலம் மருக்கள் நீங்கும். இரவு முழுவதும் உருளைக்கிழங்கு சாற்றை மருவின் மீது தடவி வைத்திருந்து காலையில் அதனை கழுவலாம்.
பேக்கிங் சோடாவுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து மருக்கள் மீது தடவவும். ஒரு சில நாட்களில் மருக்களில் நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்க முடியும்.
அன்னாசிப் பழச் சாற்றினை மருக்கள் மீது தடவி காய விடவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் மருக்கள் விரைவில் காணாமல் போகும்.