சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்துகிறோம். இது வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது.
பூண்டு உடலுக்கு நல்லது என்று தெரியும். பூண்டு உங்கள் கழிப்பறைக்கு நல்லது என்று உங்களால் நம்ப முடிகிறதா? இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு பல் பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக நசுக்கி கழிப்பறையில் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து கழிவறையை சுத்தம் செய்தால் கிருமிகள் போய்விடும்.
- Advertisement -
அதேபோல இன்னொரு யோசனையும் இருக்கிறது. நல்ல கொதிநீரில் கொதிக்க, கொதிக்க பூண்டை நறுக்கிப் போட வேண்டும். அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து 15 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும். தொடர்ந்து அந்த தண்ணீரை வடிகட்டி, அதை இரவு நாம் தூங்கும் முன்பு கழிவறையில் ஊற்றவேண்டும்.
இரவு முழுவதும் இந்த தண்ணீர் கிடக்கும். மறுநாள் காலையில் இதை தேய்த்துக் கழுவினால் கழிப்பறையில் துர்நாற்றம் இருக்காது. வாரம் இருமுறை இப்படி செய்தால் உங்கள் கழிப்பறையில் கரையும் படியாது. பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். முயற்சித்துப் பாருங்களேன்.