பேரிக்காய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதில் அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்து, விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துக்களும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஏ, பி, பி2 போன்ற விட்டமின்களும் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- குழும விட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.
மருத்துவ பயன்கள்:
தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.
சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.
100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.