உலகளவில் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு

 

உலகளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது என்று ‘தி லான்செட்’ ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், பெரியவர்களின் உடல் பருமன் விகிதம், பெண்களில் இருமடங்காகவும், ஆண்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 
 
Exit mobile version