இன்றைய கால கட்டத்தில், பன்னீர் பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்த உணவாகிப் போய் விட்டது. பன்னீரை நீங்கள் பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று.
பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், காலை உணவாகப் பன்னீரை எடுத்துக் கொள்வது என்பது மிக நல்லது.
- Advertisement -
மேலும், இந்தப் பன்னீர் என்பது இந்திய சமயலறையில் எளிதில் கிடைக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதனை கடைகளில் வாங்கலாம் அல்லது வீட்டில் பிரஷ்ஷாக தயாரிக்கலாம். இது பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. மேலும் கொழுப்புகளை எரிக்க உதவும் சைவ உணவாகப் பன்னீர் உள்ளது. ஆகவே உங்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்க அடிக்கடி பன்னீர் போன்ற உணவை உங்கள் காலை உணவாக உட்கொண்டு நன்மை அடையுங்கள்.
காட்டேஜ் சீஸ் அல்லது பன்னீர் மிகவும் லேசானது, ஊட்டச்சத்து மிக்கது மற்றும் மிக முக்கியமாக கொழுப்பு குறைவான உணவாகவும் இது பார்க்கப்படுகிறது. பொதுவாகவே, இரவு முழுவதும் நன்கு தூங்கி எழுந்த பிறகு காலை உணவை தவிர்த்தல் நல்லதல்ல. அதிலும், ஒரு நாளின் தொடக்கத்தில் உடலுக்கு மிக அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. பன்னீர் புரதச்சத்தின் ஆதாரமாக விளங்குகிறது என்பதால் இதன் மூலம் அதிக பட்ச ஆற்றல் கிடைக்கிறது.
- Advertisement -
காலையில் புரதச்சத்து எடுத்துக் கொள்வதால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடிகிறது. மேலும் கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற இதர ஊட்டச்சத்துகள் பன்னீரில் உள்ளது. பன்னீரை சமைப்பதால் அல்லது பொரிப்பதால் அதன் ஊட்டச்சத்துகள் வீணாகி விடுகிறது, ஆகவே இதனை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது என்பது சாலச் சிறந்தது.
மேலும் பன்னீரை சமைக்காமல் அப்படியே உட்கொள்வதால் ஜீரணிக்க தாமதமாகிறது, இதனால் ஆற்றல் மெதுவாக வெளிப்பட்டு நீண்ட நேரம் பசி எடுக்காத நிலை உண்டாகிறது என்பதும் பன்னீரை காலை உணவாக உட்கொள்ளலாம் எனபதற்கு மற்றொரு முக்கியக் காரணமாக இங்கு சொல்லப்படுகிறது. வாருங்கள் காலை உணவாகப் பன்னீரை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நமக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
பன்னீரில் லாக்டோஸ் குறைந்தளவு இருப்பதால் பால் அழற்சி இருப்பவர்கள் கூட குறைவாக இதனை எடுத்து வரலாம். மேலும், ஒவ்வொரு 100 கிராம் பன்னீரில் 265 கலோரிகள், 20.8 கிராம் கொழுப்பு, மொத்த கார்போஹைட்ரேட்டின் 1.2 கிராம் உள்ளது. 18.3 கிராம் புரதம் மற்றும் 208 மிகி கால்சியம போன்ற சத்துக்கள் உள்ளன.
பக்கவாதத்தை தடுக்க உதவுகிறது
பன்னீரில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இதன் மூலம் குறைக்கிறது. மேலும், பன்னீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
சரும பாதுகாப்பை மேம்படுத்துகிறது
பன்னீரில் செலினியம் இருப்பது உடலில் பளபளப்பான சருமத்தை தருகிறது. எனவே அன்றாட உணவில் பன்னீர் சேர்த்துக் கொள்ளப்படும் பட்சத்தில், சரும ஆரோக்கியம் நல்ல முறையில் மேம்படுகிறது.
சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது
காலை உணவாகப் பன்னீரை எடுத்துக் கொள்ளும் போது, அது நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. பன்னீரில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு. இதனை உட்கொள்வதால் உடலுக்கு நன்மை கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் நல்ல கொழுப்பு உட்கொள்வது அவசியம். இது தவிர, பன்னீரில் உயர் புரத அளவு இருப்பதால் நாள் முழுவதும் ஆற்றலைத் தருகிறது. இதனால் உடலானது மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு
பன்னீர் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. பன்னீர் சாப்பிடக்கூடாது என்று எந்த வயதினருக்கும் வரையறை விதிக்கப்படுவதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பன்னீர் உட்கொள்ளலாம். அனைவருக்கும் ஒரே அளவு நன்மைகளைத் தருவது பன்னீர். சமைக்கப்படாமல் இருக்கும் பன்னீரை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ள முடியும். இதனால் அவர்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமையடைகிறது. அவர்களின் ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. மனித ஆரோக்கியத்திற்கு உதவும் சூப்பர் உணவிற்கு நிகரான ஒரு உணவாக பன்னீர் கருதப்படுகிறது.
கால்சியம் சத்து அதிகம்
வயது ஆக, ஆக எலும்புகள் தேய்மானம் அடைகிறது. அதிலும், பெண்களுக்கு சீக்கிரத்திலேயே எலும்புகள் பாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனையை பன்னீர் உட்கொள்வதன் மூலமாக சுலபமாகக் கையாள இயலும். பன்னீரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. ஆனால், பன்னீரை சமைக்காமல் சாப்பிட்டால் தான் இது நம் உடலில் சேருகிறது. காரணம், சமைத்த பன்னீரில் சத்துக்கள் வெகுவாகக் குறைந்து போகிறது.
எடை குறைப்போருக்கு சிறந்த உணவு
பசியுணர்வை குறைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதனால் பசியுணர்வு குறைக்கப்பட்டு அதிக கலோரிகள் உட்கொள்ளாத நிலை ஏற்படுகிறது. ஆகவே எடை இழப்பிற்கான முயற்சியில் இருக்கும் நபர்கள் காலையில் பன்னீரை எடுத்துக் கொள்வது என்பது சாலச் சிறந்தது.