News

News

Thursday
June, 8 2023

நீங்கள் ஒல்லியா? இதோ குண்டாவதற்கு சில முறைகள்!!

- Advertisement -

பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்!

இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள்.

இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற்று சற்றுப் பூசினாற்போல குண்டாக மாற வாய்ப்பு உள்ளது. உடலைச் கொழுக்க வைப்பதிலும் எடையை அதிகரிப்பதிலும் பால், சோயாபால்,அத்திப்பழம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முதலில் பால் வைத்தியத்தைப் பின்பற்றலாம். காலை முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இது இரவு எட்டு மணி வரை தொடர வேண்டும். அடுத்த நாளும் காலை எட்டு மணிக்கு இந்தப் பால் வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டும். வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.

Also Read:  எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்

பாலை லேசாகக் சுட வைத்தால் போதும். சர்க்கரை வேண்டாம். மூன்றாவது நாள் முதல் மணி நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்த வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர வேண்டும். சிலருக்கு இந்த முறையில் தொடர்ந்து பால் சாப்பிடுவது திகட்டும். இவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். ஸ்டிரா மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை உறிஞ்சலாம். பசும் பாலுக்குப் பதிலாக சோயா பாலையும் பயன்படுத்தாம். ஆறு நாட்களுக்குப் பிறகு பாலும் அத்திப்பழமும் கலந்து மூன்று வேளையும் சாப்பிட ஆரம்பியுங்கள். நீங்கள் சதை போடுவதை உணர முடியும்

மாற்று முறை:

வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியாக உணவில் இடம் பெற்றால், பஞ்சாபியர்களைப் போல வாட்டசாட்டமாக வளர முடியும். கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், மக்னீஷியம் அதிகம் உள்ள முள்ளங்கி, பீட்ரூட் வைட்டமின் டி (D) அதிகமுள்ள பால், மீன், எண்ணெய் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகம் உள்ள ‘சோயாபீன்ஸையும் உணவில் சேர்க்க வேண்டும்.

Also Read:  எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்

ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண்பது சதவிகிதம் திரவமாகவும், மீதி திட உணவாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும். உணவில் உள்ள வைட்டமின்கைளுயம், தாது உப்புக்களையும் நன்கு உறிஞ்சிக் கொண்டு,கழிவுகளையும் தாமதமின்றி வெளிேற்ற பி வைட்டமின்கள் அவசியம் தேவை திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு,கடலை முதலியவற்றில் “பி” வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் “E” உள்ளது. இவற்றில் சமைத்தால் உடல் எடை அதிகரிக்கும்.

டர்னிப், கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, பீட்ரூட், காரட் முதலியவற்றை காய்கறி சாலட் போல் சாப்பிட வேண்டும். பச்சையாகச் சாப்பிட முடியாதவர்கள் லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம். குண்டாக மாற விரும்புகிறவர்கள் கர்பபி, தேநீர், புகைப்பழக்கம் முதலியவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

Also Read:  எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்

மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் போதும். குண்டாக விரும்புகிறவர்கள் எப்போதும் சாப்பிடுவதைவிடக் கூடுதலாக 500 கலோரி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனால் வாரத்துக்கு 650 கிராம் வீதம் உடல் எடை அதிகரித்து வரும்.

சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும். நோஞ்சான் குழந்தைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் உயர்ந்த சத்துணவு இது. சோயா மாவில் செய்யப்பட்ட முறுக்கு, பக்கோடா முதலியவை நல்ல நொறுக்குத் தீனிகள்.

ஒல்லியானவர்களும் குழந்தைகளும், பெரியவர்களும் இந்த நொறுக்குத் தீனியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நன்கு வளர்ந்து குண்டாகிவிடுவார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: