இந்த பழங்களை சாப்பிட்டால் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்!

 

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடல் சூட்டைக் தணிக்கவும், வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் பழங்கள் தான் பெரிதும் உதவுகிறது. இயற்கை அளித்த வரப்பிரசாதங்களில், கோடையில் கிடைக்கும் பழங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தர்பூசணி பழம்

 

அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழம், கோடையின் தாகத்தை தீர்க்க பெரிதும் உதவுகிறது. பழத்தின் உள்ளிருக்கும் சிவப்பு நிற சதைப்பகுதி மிகுந்து இனிப்புச் சுவையுடையது. இப்பழத்தில் வைட்டமின் பி1, சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது. குறைந்த விலையில் கிடைப்பது இப்பழத்தின் மற்றுமொரு சிறப்பு. இப்பழம், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

பன நுங்கு

 

கோடைகாலத்தில், கிடைக்கும் பன நுங்கு, தாகத்தை தணிக்கக் கூடியது. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லது. நீர்ச்சத்து நிறைந்த நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்.

இளநீர்

 

காலை வேளையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் சூட்டை தணிக்க வல்லது இளநீர். வயிற்று கோளாறுகளையும் தீர்த்து விடும். தொடர்ந்து இளநீர் குடித்து வந்தால், சிறுநீர் கற்கள் உருவாவவது தடுக்கப்படும்.

முலாம் பழம்

கண் பார்வையை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் முலாம் பழத்திற்கு உண்டு. மலச்சிக்கல் நீங்குவதற்கும், மூலநோயை குணப்படுத்தவும் முலாம் பழம் உதவுகிறது. அஜீரணத்தை குணப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது முலாம் பழம்.

 
Exit mobile version