நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னைகளுள் அசிடிட்டி ஒன்றாகும்.
அமிலம், செரித்தல் நிகழ்வின் போது உணவுப் பொருட்களை சிதைக்கப் பயன்படுகின்றன. வயிற்றில் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது ஏற்படும் சூழ்நிலையே “அசிடிட்டி’ எனப்படும்.
மோசமான உணவுப்பழக்கம், மன அழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும். இதனை எளிதில் தடுக்கும் எளிய இயற்கை முறைகளை பார்ப்போம்.
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.
உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள். இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது.
குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் அசிடிட்டி சிறந்த நிவாரணம் பெறலாம்.
கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊற விட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.
ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.
கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.
ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh