குழந்தைக்கு வறட்டு இருமல் மருத்துவம்

 

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 6 துளசி இலைகள் போட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக்கி குழந்தையின் கழுத்து, நெஞ்சுப் பகுதி, முதுகு, பாதம் ஆகிய இடங்களில் தடவலாம்.

பிள்ளைகள் தூங்கும் போது இளஞ்சூடான பாலில் மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகையும், மிளகுத்தூள் சிட்டிகையும் கலந்து அந்த சூட்டிலேயே பிள்ளைகளை குடிக்க வையுங்கள். தொடர்ந்து ஒருவாரம் வரை கொடுத்தாலே போதுமானது. நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

 

அதிமதுரம், கடுக்காய், மிளகு இந்த மூனையும் சம அளவு எடுத்து, இளம் வறுப்பா வறுத்து, பொடி செஞ்சு 2-4 கிராம் அளவு தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா, சூட்டுனால வர்ற இருமல் குணமாகும். அதிமதுரத் துண்டு ஒன்னு எடுத்து வாயில போட்டு சுவைச்சு விழுங்கிட்டா கூட வறட்டு இருமல் குணமாகும்.

உலர் திராட்சையை வாங்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து கொடுத்து வந்தால், குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.

 

தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் கலந்து தேய்ப்பது ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தான். ஆறுமாத குழந்தைக்கு இதை பயன்படுத்த வேண்டாம். கற்பூரம் குழந்தையின் சருமத்தை பாதிக்கும். அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் துளசி இலைகளை நறுக்கி சேர்க்கவும்.

தினமும் இரண்டு வேளையும் குழந்தையின் மார்பு, முதுகு, தொண்டை, இடுப்பின் இரண்டு பக்கவாட்டு பகுதிகள் கால்களில் தடவவும். குழந்தையின் நெஞ்சு பகுதியில் இருக்கும் சளியை கரைக்க செய்யும். பாதிப்பில்லாத பாட்டி வைத்தியம். தேங்காய் எண்ணெயுடன் துளசிக்கு மாற்றாக பூண்டை நசுக்கியும் காய்ச்சி ஆறவைத்து தடவுவதன் மூலம் இருமல் சற்று மட்டுப்படும்.

 
 
Exit mobile version