News

News

Wednesday
June, 7 2023

ஓட்ஸ் உண்மையிலேயே உடல் எடையை குறைக்குமா..?

- Advertisement -

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது.

அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது. அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர்.

ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

Also Read:  எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது. சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது. எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர். ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

Also Read:  எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்

ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது. ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

Also Read:  எலும்பு முறிவுகளுக்கான சில முதலுதவிகள்

ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது. இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: