Buttermilk Benefits: கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த பானம்!!

 

முற்காலத்தில் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது மோர் கொடுக்கும் பழக்கம் இருந்தது, மோர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற பானமாகும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, இஞ்சி, பச்சை மிளகாய், சீரக விதைகள் மற்றும் உப்பு போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருட்களுடன் மோர் தயார் செய்யும் போது அது ஒரு சிறந்த பானமாக இருக்கும்.

 

மோரில் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. உடலில் நீர்ச்சத்து சமநிலையை பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக, செரிமானத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகள், நல்ல பாக்டீரியா, லாக்டிக் அமிலம் போன்றவை இதில் உள்ளன.

 

இது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது.

இதில் உள்ள கால்சியம் எளிதில் உறிஞ்சப்பட்டு, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 

மோரில் வைட்டமின் சி மற்றும் பி உள்ளன, இது சருமத்தைப் பாதுகாக்கவும் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

கோடை காலத்தில் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியடையும். அது மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

இத்தனை நன்மைகள் இருந்தபோதிலும், மோர் ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது, ஏனெனில் இது வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

வெயில் காலத்தில் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியடைவதுடன், உஷ்ணத்தால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும்.

 
Exit mobile version