கருப்பு தினை நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தானியங்களில் நன்மைகளை அளிக்க கூடிய பலவகைகள் இருந்தாலும் கருப்பு தினையின் பயன்கள் மிக அற்புதம். ஏனெனில் இதில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மிக அதிக விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
அது மட்டும் அல்லாமல் கருப்பு தினையில் அதிக அளவு புரோட்டீன், நார்ச்சத்து, 10 அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. சைவ பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நமது உடலுக்கு கூடுதல் பயன் அளிக்கும் நார்ச்சத்தும் சேர்ந்து இருப்பது சிறப்பு அம்சம்.
இந்த கருப்பு தினையில் புரோட்டீன், இரும்புச் சத்து, விட்டமின்கள் பி, ஆந்தோசயனின், காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன.
இந்த தானியத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை சரி செய்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, உடல் எடை ஆகியன அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். இது முழு தானியம் என்பதாலே கொஞ்சம் சாப்பிட்டாலே நிறைவு கிடைக்கும்.
இதயக் கோளாறு கொண்ட மக்களுக்கு கருப்பு தினை பரிந்துரைக்கின்றன, ஏனெனில் இது கொழுப்பு அளவுகளை அதிகரிக்காது. இது உங்கள் இதயத்திற்கு சேதத்தை மேலும் குறைக்கக் கூடிய கொழுப்பை குறைக்கலாம்.
இந்த கருப்பு தினையில் விட்டமின் பி, போலேட் போன்றவை ஆரோக்கியமான நரம்பு மண்டலம் கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. அதே மாதிரி கண்களின் ஆரோக்கியத்திற்கு, கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் இதில் காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்றவை அழற்சியை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்ல இரும்புச் சத்து தான் உதவுகிறது. இரும்புச் சத்து குறைவாக இருந்தால் உடல் பலவீனம், சோர்வு மற்றும் அனிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு கப் கருப்பு தினையில் சுமார் 15% இரும்புச் சத்து அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.